வாகன விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டீஸ் நாளைய தினம் பாணந்துரை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய காலி வீதி - ஹொரேதுட்டுவ பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கார் ஒன்று பாதசாரதி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது மொரட்டுவ பகுதியிலிருந்து பாணந்துறை நோக்கிச் சென்ற கார் பாதசாரதி மீது மோதியுள்ளதுடன் , படுகாமடைந்த பாதசாரதி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் , விபத்து தொடர்பில் காரின் சாரதியான கிரிக்கட் வீரர் குசல் மெண்டீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குசல் மெண்டீஸ் விபத்து ஏற்படும் போது மதுபோதையில் இருந்துள்ளாரா ? என்பதை கண்டறிவதற்காக அவரது இரத்தமாரிகள் பரிசோதிக்கப்பட்டதுடன் , பின்னர் பொலிஸார் அவரை இவ்வாறு கைது செய்துள்ளனர்.