சுவை உணரும் திறனை கொரோனா வைரஸ் நேரடியாக பாதிப்பதில்லை என்பதை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

Coronavirus testing methods: What you need to know - COVID-19 ...

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட உடன் பெரும்பாலனவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. வேறு சிலருக்கு சுவை உணரும் திறன் மற்றும் நுகரும் திறன் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றபின் நான்கு வார காலங்களில் சுவை உணரும் திறன் மீண்டும் ஏற்படுகிறது.  இதனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிருக்கும் நோயாளிகளின் சுவை உணர்வு மற்றும் நுகரும் திறன் பாதிப்புக்கும் கொரோனா வைரஸ் முழு காரணமல்ல என்றும் தெரியவந்திருக்கிறது.

கொரோனாத் தொற்றின் அறிகுறிகளான சளி, காய்ச்சல் போன்றவை காரணமாக ஏற்படும் மூக்கடைப்பு மற்றும் உணர்வு நாளங்கள் செயலிழப்பு காரணமாகவே சுவையுணர்வு திறனும், நுகரும் திறனும்  பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக சுவை உணரும் திறன் பாதிக்கப்படுவதற்கு கொரோனா வைரஸ் கிருமிகளுக்கும் நேரடியாக தொடர்பு இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

-டொக்டர் ஸ்ரீதேவி.