(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது உறுதியாகும். சிறிலங்கா சுதந்திர கட்சியை விமர்சித்து அந்த வாய்ப்பை இல்லாமலாக்கிக் கொள்ளவேண்டாம். சந்தர்ப்பத்தை பாதுகாத்துக்கொள்வது மொட்டு கட்சி வேட்பாளர்களின் பொறுப்பாகும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அகுனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல்  மிகவும் முக்கியமான தேர்தலாகும். இதில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது உறுதியாகும். என்றாலும் மூன்றில் இரண்டு பெறும்பான்மை பலத்தை பெற்று உறுதியான அரசாங்கம் அமைப்பதே எமது இலக்காகும். அதற்கு நாங்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டும். சிறிலங்கா சுதந்திர கட்சியை விமர்சிப்பவர்கள், தங்களுக்குள் இருக்கும் வேதனையிலே அவ்வாறு செயற்படுகின்றனர் என்பது எமக்கு தெரியும்.

என்றாலும் சுதந்திர கட்சியை விமர்சிப்பவர்களில் அதிகமானவர்களின் தாய் கட்சியாக இருப்பது சிறிலங்கா சுதந்திர கட்சியாகும். அவர்கள் முதலாவதாக பாராளுமன்றம் சென்றது இந்த கட்சியில் இருந்து என்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.