கொரோனா வைரஸ் தொற்றுநோயைச் சமாளிக்கும் நோக்கில் உலகளாவிய யுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் தீர்மானத்தை விரைவாக அமுல்படுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். 

உலகளாவிய மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கான ஐ.நா.வின் அழைப்பு பாராட்டத்தக்கது, இது மிகவும் அவசரமாக தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தேவையான அமைதி மற்றும் பாதுகாப்பை அனுமதிக்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தனது வழக்கமான ஏஞ்சலஸின் உரையினைத் தொடர்ந்து அவர் தெரிவித்தார்.

அத்துடன் துன்பப்படும் பலரின் நலனுக்காக இந்த முடிவு திறம்பட மற்றும் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். இந்த பாதுகாப்பு சபையின் தீர்மானம் அமைதியான எதிர்காலத்தை நோக்கி ஒரு தைரியமான முதல் படியாக மாறாட்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

ஜூலை முதலாம் திகதி, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் ஒருமனதாக அதன் நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்து சூழ்நிலைகளிலும் பகைமைகளை பொதுவான மற்றும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர். 

கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுவதற்கு "நீடித்த மனிதாபிமான கட்டத்தில்" உடனடியாக ஆயுத மோதல்களை நிறுத்தவும் அழைப்பு விடுத்தனர்.

தீர்மானத்தில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு சபை குரல் கொடுத்தது, அவர் முதலில் மார்ச் 23 அன்று உலகளாவிய போர்நிறுத்தத்தை முன்மொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது.