மலையகத்தைச் சேர்ந்த தமிழ் தலைவர்கள் இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெளியில் தமது சேவைகளை வழங்கிய போதிலும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு இதுவரை எந்தவொரு சேவையையும் அவர்கள் செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான தேர்தல் பிரசார அலுவலகம் இரத்தினபுரி - புதிய நகர் பகுதியில் இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மலையக மக்களுக்கான தலைவர்கள், இரத்தினபுரி மாவட்டத்தில் இல்லாமையே இந்த பிரச்சினைக்கான காரணம் எனவும் அவர் கூறினார்.
எனினும், குறித்த தலைவர்களின் பிரதிநிதிகள் இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிலையில், அவர்களினால் கூட இந்த மாவட்டத்திற்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மலையக தலைவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திற்கே அனைத்து உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திகளை வழங்கி வருகின்றமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், கவனிப்பாரற்று காணப்படும் இரத்தினபுரி மாவட்டத்தினை முன்னேற்றமடைய செய்ய, இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தலைமைத்துவமொன்று பாராளுமன்றத்தை நோக்கி செல்வது தற்போதைய நிலையில் அத்தியாவசியம் எனவும் அவர் கூறுகின்றார்.
இதுவரை பின்தள்ளப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இனிவரும் காலங்களில் தான் முன்னின்று செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் நம்பிக்கை வெளியிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM