கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த ராகா எல்-கெடாவி என்ற எகிப்த் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை உயிரிழந்துள்ளார்.

கொவிட்-19 தொற்கு காரணமாக ராகா அல்-கெடாவி இன்று காலை அவரது 81 ஆவது வயதில் உயிரழந்துள்ளதாக எகிப்திய நடிகர்கள் சங்கத் தலைவர் அஷ்ரப் ஜாக்கி ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சுகாதார காரணங்களுக்காக அவருக்கு பொது இறுதி சடங்குகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

கெடாவி மே மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சாதகமாக பரிசோதித்த நிலையில், கெய்ரோவிற்கு கிழக்கே 130 கி.மீ (80 மைல்) தொலைவில் உள்ள இஸ்மாயிலியா மாகாணத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.