கடந்த காலங்களிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த அரசியல்வாதிகள் தாங்கள் பதவிகளை பெறுவதற்காக மாத்திரமே மக்களின் வாக்குகளை பயன் படுத்தினார்களே தவிர மக்களது நலனோம்பு விடயங்களுக்கு பயன்படுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் வேட்பாளர் மகேந்திரன் தலமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

கடந்த காலங்களிலே இந்த பிரதேசத்திற்கு வீடமைப்புத் திட்டங்களை கையளிப்பதற்காக நான் பல தடவைகள் வந்திருக்கின்றேன் இதனால் இந்த பிரதேசத்தின் பிரச்சினைகளை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன்.

எனக்கு நம்பிக்கை இருக்கின்றது நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய பின் அமைய இருக்கின்ற பாராளுமன்னற்திலே இந்த பட்டிருப்பு தொகுதியில் இருக்கின்ற அனைத்து பிரச்சினைகளையும் இனக்கண்டு அவற்றினை தீர்க்கும் பொருட்டு விசேட செயலணி ஒன்றினை அமைத்து அதன் மூலம் தீர்த்து வைப்பதற்கு நான் களத்திலே இறங்குவேன் என்பதனை உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

கடந்த காலங்களிலே  இந்த மாவட்டத்தில் இருந்த அரசியல்வாதிகள் தாங்கள் பதவிகளை பெறுவதற்காக மாத்திரமே மக்களின் வாக்குகளை பயன் படுத்தினார்களே தவிர மக்களது நலனோம்பு விடயங்களுக்கு பயன்படுத்தவில்லை என்பது எனக்கு தெரியும். மாறாக உங்களது வாக்குகளைப்பெற்று பாராளுமன்றம் சென்றதும் அந்த அதிகாரத்தை உங்களுக்கு பாவிக்காமல்அவர்கள் அவர்களுடைய பதவிகளுக்காகவும் அந்தஸ்தினை கூட்டிக் கொள்வதற்காக பாவித்தார்கள் என்பதும் எனக்கு தெரியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுக 345 கிராம சேவையாளர் பிரிவுகள் 1240 சிறிய கிராமங்கள் அனைத்தினையும் ஒன்றிணைத்து இந்தேர்தலின் மூலம் அமைய இருக்கின்ற பாராளுமன்றத்தில் பிரதமரென்ற அடிப்படையில் விசேட செயலணியை எனது தலமையில் அமைத்து மாவட்டம் பூராகவும் அபிவிருத்தி செய்து தருவேன் என இத்தால் கூறிவைக்க விரும்புகின்றேன்.

இந்த மாவட்த்தின் மூன்று தொகுதிகளையும் நன்கு அறிந்தவன் என்ற வகையில் இது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். இதனால் பல இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர். இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தொழில் பேட்டைகளை அமைத்து தொழிலில்லா பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவேன்.

இந்த நாட்டினை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டுமாக இருந்தால். ஐனாதிபதியாக இருக்கலாம் பிரதமராக இருக்கலாம் செய்யவேண்டிய வேலைகளுக்கென ஒழுங்கான முறமையொன்று இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லையென்றால் வெற்றிகாண முடியாது. 

இந்த நாட்டிலே பலதரப்பட்ட பிரச்சினைகள் உள்ளது மீன்பிடி சமூகம் விவசாயசமூகம் வறுமையில் வாடிக்கொண்டு இருக்கின்றது. மாறாக நாட்டில் முன்னணியில் இருக்க வேண்டிய கல்வி சுகாதாரம் என்பன முன்னுரிமை அளிக்கப்படாமல் உள்ளது. 

இவை அனைத்தினையும் சீர் செய்து இந்த நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்லவேண்டிய தேவை எமக்குள்ளது. எனவே எதிர்வரும் தேர்தலில் தொலைபேசி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் இந்த நாட்டிலே ஒரு புதிய யுகத்தினை என்னால் படைக்க முடியும் என உறுதியளிக்கின்றேன் என இதன் போது தெரிவித்தார்.