பிரபல பாடகர் ஹாகலூ ஹுண்டீசா படுகொலை செய்யப்பட்ட சில நாட்களில் எத்தியோப்பியாவை உலுக்கிய வன்முறை ஆர்ப்பாட்டங்களின் போது குறைந்தது 166 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதன்படி ஹாகலூ ஹுண்டீசா இந்த பின்னர், பிராந்தியத்தில் ஏற்பட்ட அமைதியின்மையில் 145 பொது மக்கள் மற்றும் 11 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளதாக எத்தியோப்பியாவின் ஒரோமியா பிராந்தியத்தின் துணை பொலிஸ் ஆணையாளர் கிர்மா கெலாம் சனிக்கிழமை அரசுடன் இணைந்த அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார். 

மேலும் 10 பேர் தலைநகர் அடிஸ் அபாபாவில் உயிரிழந்துள்ளதாக அறியப்படும் அதேவேளை 167 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர், 1,084 பேர் கைதுசெய்யப்பட்டும் உள்ளதாக கிர்மா கூறினார்.

எத்தியோப்பியாவின் மிகப்பெரிய ஓரோமோ இனக்குழுவின் உறுப்பினரான பொப் நட்சத்திரம் ஹாகலூ, திங்கள்கிழமை இரவு அடிஸ் அபாபாவில் அடையாளம் தெரியாத தாக்குதலாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இததனைத் தொடர்ந்தே இவ்வாறு பதட்டங்களை அதிகரித்துள்ளது. இதேவேளை அவரின் கொலை தொடர்பாக தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.