வல்வெட்டித்துறை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

பருத்தித்துறை நீதவானின் இல்லத்தில் அவரை ஆஜர்படுத்தியபோதே, அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.