தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை கிளிநொச்சியில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து இன்று பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். 

 இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நாளாக அமைந்துள்ளதால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரால் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் இன்றைய நிகழ்வுகள் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.