அநுராதபுரம் நுவர குளத்திலிருந்து ரி - 56 வகையான துப்பாக்கியொன்றை மீட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் பிஹிரி ஹொரவ்வ பிரதேசத்தில், துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சுத்திகரிப்பு நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படும் போது நுவர குளத்தில் இரும்புப் பொருள் தென்படுவதை அவதானித்த ஊழியர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

குறித்த ஆயுதத்தை பரீட்சித்த பொலிஸார் துப்பாக்கியின்  மெகசின் போன்ற பகுதிகள் அதிலிருந்து கழற்றப்பட்டு காணப்படுவதாகவும் குற்றச்செயல் ஒன்றை புரிந்த பின்னர், துப்பாக்கியை குளத்தில் வீசிச் சென்றிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஏனைய பாகங்கள் குளத்து நீரில் காணப்படுகின்றதா இல்யைாவென தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும், இது குறித்து மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.