தபால் மூல வாக்களிப்பு அடுத்த வாரம்

Published By: Vishnu

05 Jul, 2020 | 02:57 PM
image

(எம்.மனோசித்ரா)

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

சுகதாரத்துறையினர்

சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்களில் மாத்திரம் எதிர்வரும் 13 ஆம் திகதி அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சுகாதார மற்றும் மருத்துவ துறையுடன் தொடர்புடைய அரச உத்தியோகத்தர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை தபால் மூல வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இம்முறை பாராளுமன்ற தேர்தலானது கொரானா தொற்றின் காரணமாக புதியதொரு வழமையான சூழலில் நடைபெறவுள்ளதால் வாக்கெடுப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபடவுள்ளதால் அவர்கள் மாத்திரம் வாக்களிப்பதற்கு தனியொரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரச நிறுவன உத்தியோகத்தர்கள்

அதற்கமைய எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அனைத்து பொலிஸ் நிலையங்கள் , பாதுகாப்புபடைகள் , சிவில் பாதுகாப்புத் திணைக்களம் , சுகாதாரப் பிரிவுகள் , அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் தவிர ஏனைய அரச நிறுவனங்களில் அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

பாதுகாப்புத்துறை , தேர்தல் அதிகாரிகள்

அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடைபெறும் வாக்களிப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பளிப்பதற்கும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயலாற்றும் நடவடிக்கைகள் சம்பந்தமாக மேற்பார்வை செய்வதற்கும் அலுவலர்களை ஈடுபடுத்த நேரிட்டுள்ளமையால் அனைத்து பொலிஸ் நிலையங்கள் , பாதுகாப்புபடை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதாரப் பிரிவுகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் அஞ்சல் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 16 , 17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதில் 16 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்ற அதே வேளை , 17 ஆம் திகதி காலை 9 மணியிலிருந்து பகல் 2 வரை மாத்திரமே வாக்களிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தினங்கள்

மேற்குறித்த தினங்களில் தவிர்க்க முடியாத காரணத்தினால் வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு இம் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த இரு தினங்களும் அத்தாட்சி அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகத்திலேயே வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு 17 ஆம் திகதி வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22