ஆவரங்கால் கிழக்கு பகுதியில் உள்ள வயல் கிணறு ஒன்றிலிருந்து குடும்பத்தலைவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தூர் நிலாவரைக் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் தர்மசீலன் (வயது- 37) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை தோட்டத்துக்குச் சென்ற குறித்த நபர், நீர் இறைப்பதற்கான ஆயத்த வேலைகளை மேற்கொண்டிருந்தார். 

இதன்போது மண்வெட்டி தவறுதலாக கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது. இதன்போதே அதனை எடுக்க முற்பட்ட போது அவர் கிணற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர் .

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.