வெள்ளவத்தை பகுதியிலுள்ள புடவை நிலையமொன்றில் இடம்பெற்ற தீ பரவல் காரணமாக, குறித்த வீதியிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  

வெள்ளவத்தை, புடவை வர்த்தக நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக, காலி வீதியில் கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதி, ராமகிருஷ்ண மிஷன் சந்தியுடன் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.