வெள்ளவத்தை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை சந்தியிலுள்ள புடவை வர்த்தக நிலையமொன்றில் திடீர் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து, சற்றுமுன்ன ர்(05.07.2020) இடம்பெற்றுள்ளது. காலி வீதி, வெள்ளவத்தை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட டபில்யூ. ஏ. சில்வா மாவத்தை சந்தியிலுள்ள புடவை வர்த்தக நிலையமொன்றிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


 குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவைரையில் கண்டறியப்படாத நிலையில், தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிய வருகிறது.