பாதாள உலகக் குழு உறுப்பினர் அங்கொட லொக்காவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

´பத்தரமுல்ல பண்டி´ என்ற குறித்த நபர் தலங்கம பகுதியில் வைத்து ஹெரோயின் மற்றும் ஒரு தொகை பணத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மேலும் 2,350 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த 24 மணி நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதன்படி ஹெரோயின் மற்றும் ஏனைய போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 502 சந்தேக நபர்களும், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 05 சந்தேக நபர்களும், சட்ட விரோத மாதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 517 சந்தேக நபர்களும், கைது செய்ய உத்தரவு பிறப்பித்த 488 சந்தேக நபர்களும் மற்றும் 838 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.