கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் சுமார் 400 வீடுகள் வரை சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை அதிகாலை  நான்கு மணி முதல் காலை எட்டு மணி வரை இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

சட்டவிரோத செயற்பாடுகள், குற்றச் செயல்களில் ஈடுப்பட்டவர்கள், போன்ற பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளின் பொருட்டு இத் தேடுதல்  மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதன் போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது 280 க்கும் மேற்பட்ட பொலிஸார் இராணுவத்தினர் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.