ஊர் திரும்பமுடியாமல் தமிழகத்தில் தவிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தானும் தன்னுடைய தாயாரும் இலங்கை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

பாஸ்கரன் சந்திரமோகனா என்ற கர்ப்பிணிப் பெண்ணே குறித்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். 

செயற்கை முறையில் கருத்தரிப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தின் கோவையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் தற்போது அவர் ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் நாடு திரும்ப முடியாது பலத்த சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக கவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இது தொடர்பில் அக்கறை செலுத்துமாறும் அவர் உருக்கமான கோரிக்கைவிடுத்துள்ளார்.