கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணித்து மக்களுக்கு கையளிப்பேன் எதிர் வரும் ஆகஸ்ட் ஐந்துக்கு பிறகு இதனை செய்து தருவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பொதுக் கூட்டத்தின் போது இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

திருகோணமலை மக்களை நான் நன்கு அறிவேன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மூதூர் தொகுதி மக்கள் தேசிய ரீதியிலும் பார்க்க அமோக வாக்குகளை எனக்களித்தீர்கள் இம் முறையும் அதே போன்று எமது ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்துங்கள்.

சகல விதமான பிரச்சினைகள் இங்கு உள்ளது இன மதவாதமற்ற சேவையை மூவின மக்களுக்கும் சமமான முறையில் செய்து காட்டுவேன்.

மீனவர்கள் பிரச்சினை, விவசாய நிலங்கள் தொடர்பிலும் பல சாதகமான முறையில் சேவைகளை செய்வதற்காக எண்ணியுள்ளேன். இந்த நாட்டில் சிறுபான்மை என்று ஒன்றில்லை எல்லோரும் சமமாக வாழ வழிவகுக்க இந்த நாளில் எனது சக்தி ஊடாக முன்னெடுக்க காத்திருக்கிறேன்.

வேலையில்லா பட்டதாரிகளின் நியமனங்கள் இந்த அரசாங்கத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ளது ஆகஸ்டுக்கு பின்னர் வெற்றியுடன் பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவோம் ரணசிங்க பிரேமதாச செய்த ஆட்சியை போன்று அவரின் மகனான சஜீத் பிரேமதாச வாகிய நான் மூவின மக்களுக்கும் சமமான முறையில் சேவைகளை வழங்குவேன் எனது அப்பாவின் காலத்தில் கலாசார அமைச்சர் உட்பட தகம்பாசல போன்றன அமையப் பெற்றது.

முஸ்லிம்களின் கலாசார ரீதியான பாதிப்பற்ற நடவடிக்கைகளை இந்த நாட்டில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை திறம்பட செய்து காட்டுவேன் என்றார்.