மாத்தறையில் புதிய மது வரி அத்தியட்சகர் அலுவலகத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (04) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின்போது கலால் சட்டத்தை மீறுபவர்களை கைதுசெய்து தடுத்து வைப்பதற்கான அறையொன்றும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது மாத்தறை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது கைதுசெய்து தடுத்து வைப்பதற்கான அறையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேளிக்கையாக சிறைவைத்தமை நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவரையும் ஈர்த்தது.