மேற்கு, வடமேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில்  மழை பெய்ய கூடும் என  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் சில பகுதிகளில் சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்கக்கூடும், குறிப்பாக மத்திய மலை பிரதேசங்கள் மற்றும் வடக்கு, வட-மத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் இதனை அவதானிக்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகூடிய வெப்பநிலையாக 32 பாகை செல்சியஸ் வெப்பநிலை மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நிலவும் அதேவேளை, அதிகுறைந்த வெப்பநிலையாக 14 பாகை செல்சியஸ் வெப்பநிலை நுவரெலியாவில் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பிரதேசங்களில், புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை  வரையும் கொழும்பு மற்றும் காலி வழியாக கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்ய கூடும் எனவும் தெற்கே காற்று வீசும் அதே வேளை, நாட்டை சூழ உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு (30-40) கிலோ மீற்றராக காணப்படும்.

மாத்தறையிலிருந்து மட்டக்களப்பு,  ஹம்பாந்தோட்டை வரையிலும், புத்தளம் முதல் திருகோணமலை வரையும் மன்னார் மற்றும் கங்கசன்துறை வழியாகவும் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு  (50-60) கிலோ மீற்றர் வரை வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.