புத்தரின் பிறப்பையும், ஞானம் அடைந்ததையும் குறிக்கும் வகையில் புத்த பூர்ணிமா உலகளாவிய ரீதியில்  வருடம் தோறும்  மே மாதம் கொண்டாடப்படும். இம் முறை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இக் கொண்டாட்டங்கள் சுகாதார கட்டுபாடுகளுக்கு அமைய கொண்டாடப்பட்டது.

The Most Beautiful Buddha Sculptures in the World | Buddha Statues ...

இந்நிலையில் ஐ.நா. சபை  இத் தினத்தை  தாமதமாக கொண்டாடியது. இதன் போது   ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் புத்தரின் போதனைகள் கொரோனாவுக்கு எதிரான போரில் நாடுகளும், மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதை நினைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.

UN SG Antonio Guterres Appeals for a Year of Peace in 2017 | UNSCOL

அவர் இது குறித்து மேலும் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில், புத்தபிரான் வலியுறுத்திய ஒற்றுமையும், பிறருக்கு சேவை செய்வதும் முன் எப்போதையும் விட இப்போது முக்கியமானது. உலகளாவிய ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று நோயின் சமூக, பொருளாதார விளைவுகளை நாடுகளால் சமாளிக்க முடியும். 

புத்தர்பிரானின் போதனைகள், கொரோனா வைரஸ் விடுக்கிற சவால்களை சந்திப்பதற்கு நாடுகளும், மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதை நினைவுபடுத்துகின்றன. நாம் நமது ஆற்றல்களையும், நிபுணத்துவத்தையும் இணைப்பதன்மூலம் மட்டுமே இன்று நம் உலகில் உள்ள மிகப்பெரிய பலவீனங்களை சரி செய்ய முடியும். சர்வதேச ஒத்துழைப்பின்மூலம் மட்டுமே பொருளாதார, சமூக பாதிப்புகளை எளிதாக்குவோம்.