தென் சீனக் கடல் பகுதியில் இராணுவப் பயிற்சியில் பங்கேற அணுசக்தியில் இயங்கும் இரு விமானந் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது.

தென் சீனக் கடலில் 90 வீதமான பகுதியை சீனா உரிமை கோருகிறது. குறிப்பாக புருணை, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்வான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் தென் சீனக் கடலின் சில பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக அணுசக்தியில் இயங்கும் இரு விமானந்தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இந்தப் பகுதியில் சீனா தன் பலத்தைக் காட்டிவரும் நிலையில், இவ்விரு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும் பயிற்சிகளில் பங்கேற்று வருகின்றன. யு.எஸ்.எஸ். ரொனால்ட் ரேகன், யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் என்ற இரு விமானந் தாங்கிக் கப்பல்களும் தென் சீனக் கடலில் இருப்பதை அமெரிக்க கடற்படையும் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.