பங்காளதேஷின் தலைநகர் டாக்காவில் குல்‌ஷன் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக் கைகதிகளாக பிடித்த 20 பேரை சுட்டுக்கொன்றனர்.

இதற்கிடையே 6 தீவிரவாதிகளை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்களில் 5 பேரின் புகைப்படங்களை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டது.

அவர்களது பெயர் ஆகாஷ், பிகாஷ், டான், பட்கான் மற்றும் ரிபான் என வெளியிட்டுள்ளது. இவர்கள் டாக்காவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக மாணவர்களாகும். இவர்கள் அனைவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் 21 முதல் 27 வயதுடையவர்களாகும்.கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதியில் இருந்து மாயமாகி இருந்தனர். 

தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் வசதி படைத்த பணக்கார குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.