பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Shah Mahmood Qureshi, Foreign Minister of Pakistan to speak at ...

பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 ஆயிரத்து 619 பேர் இறந்துள்ளனர்.

பாகிஸ்தானில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷியும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஷா முகம்மது குரோஷி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்து ஷா முகம்மது  குரோஷி தனது டுவிட் பதிவில், “ எனக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. உடனடியாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன்.  தற்போது எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்லாவின் கருணையால் நான் வலுவாகவும் தன்னம்பிக்கையுடன் உள்ளேன். வீட்டில் இருந்தபடியே எனது பணிகளை நான் தொடர்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.