bestweb

விமான விபத்து ; சிதைவடைந்த நிலையில் சடலங்கள் மீட்பு

Published By: Raam

04 Jul, 2016 | 02:51 PM
image

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு 66 பேருடன் ‘எகிப்து ஏர்’ நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த மே மாதம் 19  ஆம் திகதி புறப்பட்டது. ‘MS804’ என்ற  விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக சில மணி நேரத்தில் தெரியவந்தது.

எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் விமானத்தின் பாகங்களும் பயணிகளின் உடல் பாகங்களும் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், எந்த உடல்களும் முழுமையாக மீட்கப்படாத நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டியும் கிடைக்காமல் இருந்தது. 

ஜுன் மாதம் 23 ஆம் திகதிக்குள் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்காவிட்டால் அதில் உள்ள தகவல்களை மீட்க முடியாது என்று முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகளில் ஒன்றுமட்டும் கிடைத்துள்ளதாக ஜுன் 17ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. மொரீஷியஸ் நாட்டுக்கு சொந்தமான மீட்பு கப்பல் குழுவினர் கண்டுபிடித்த இந்த கருப்பு பெட்டியில் உள்ள விபரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக எகிப்து விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

நீண்ட தேடுதலுக்கு பின்னர் கடலின் அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்த கருப்பு பெட்டியின் பெரும்பகுதி உப்பு படிந்தும் லேசாக சேதமடைந்தும் இருந்தது. அந்த சேதத்தை சீர்படுத்தி பழுது பார்க்கும் பணிகள் பிரான்ஸில் உள்ள பாரிஸ் நகரில் நடந்து வந்தன.

இந்த பணி முடிவடைந்து விட்டதாகவும், அந்த கருப்பு பெட்டி விரைவில் கெய்ரோவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. கெய்ரோவில் எகிப்து நாட்டு விமான நிலைய வல்லுனர்கள் அந்த பெட்டியில் உள்ள குரல் பதிவுகளை ஆய்வுசெய்த பின்னர்தான் அந்த விமானத்தின் பின்னணி அல்லது காரணம் என்ன? என்பது தெரியவரும்.

இதற்கிடையில், விபத்துக்குள்ளான விமானத்தில் சென்றவர்களின் சடலங்கள் ஆழ்கடலில் தேடி, மீட்கும் பணியில் மொரீஷியஸ் நாட்டை சேர்ந்த ‘ஜான் லேத்பிர்ட்ஜ்’ என்ற கப்பல் கடந்த இருமாதங்களாக ஈடுபட்டு வந்தது. 

செயற்கைக்கோள் துணையுடன் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இருந்த அனைத்து சடலங்களும் நேற்று மீட்கப்பட்டதாகவும், மிகவும் சிதைவடைந்த நிலையில் உள்ள அந்த சடலங்களுடன் எகிப்து நாட்டில் உள்ள அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தை நோக்கி அந்தக் கப்பல் சென்று கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் எகிப்து நாட்டின் சுகாதாரத்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகளிடம் அந்த சடலங்கள் ஒப்படைக்கப்படும் என தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3...

2025-07-17 13:14:07
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணையை இரத்துசெய்யவேண்டும்...

2025-07-17 12:07:06
news-image

ஈராக்கில் தீவிபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் பலி

2025-07-17 11:51:39
news-image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி...

2025-07-17 11:34:18
news-image

தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில்...

2025-07-17 10:58:55
news-image

பிரிட்டனின் இரகசிய ஆவணத்தில் உள்ள விபரங்கள்...

2025-07-17 10:40:13
news-image

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது:...

2025-07-17 09:36:00
news-image

பெல்ஜியத்தில் டுமாரோலேண்ட் இசை விழாவின் பிரதான...

2025-07-17 09:08:12
news-image

சிரியாவின் இராணுவதலைமையகம் ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள...

2025-07-16 20:22:03
news-image

பன்னாட்டு படையினருக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள்...

2025-07-16 16:15:46
news-image

காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை-...

2025-07-16 15:39:13
news-image

21 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம்...

2025-07-16 12:42:39