இந்தியாவின், பெங்களூரில் தனது காதலன் சரன் கடந்த வாரம் வீதி விபத்தில்  உயிரிழந்ததை தாங்க முடியாது 24 வயதுடைய இளம் யுவதி பூஜா 11 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த பூஜா அதே நிறுவனத்தில் ஜே.சி.நகரை சேர்ந்த சரண் என்பவரை காதலித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பெங்களூர் புறநகர் நந்திமலைக்கு தனது நண்பர்களுடன் சென்ற காதலன் சரண் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து, காதலன் விபத்தில் பலியானதால் மனம் உடைந்த பூஜா, தன் காதலனுடன் சேர்வதற்காக நேற்று தன் உயிரை தியாகம் செய்துகொண்டுள்ளார். 

தற்கொலை முடிவை நான் எடுத்திருக்கக்கூடாது, ஆனாலும் அப்படி செய்ய வேண்டியதாகி விட்டது. என்று கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து விட்டே பூஜா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.