கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இரு கடற்படை வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த இருவரும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்படி குறித்த இருவருடன் இதுவரை 879 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு வெளியேறிய கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.