நாட்டில், இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் மடகஸ்காரிலிருந்து நாடு திரும்பியவர் எனவும்,பெல்வெஹெர தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,067 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை1,863 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று நோயாளிகளில் 193 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 10 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 57 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.