2011 உலகக்கிண்ண கிரிக்கெட் விவகாரம் : போதிய ஆதராங்கள் இன்மையால் விசாரணைகள் நிறுத்தம்

Published By: Digital Desk 4

03 Jul, 2020 | 07:40 PM
image

(செ.தேன்மொழி)

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் போதிய ஆதராங்கள் கிடைக்கப்பெறவில்லை.

ஆகையால் இது தொடர்பான விசாரணைகளை நிறுத்தி வைப்பதற்கு விளையாட்டு குற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த விசேட பொலிஸ் விசாரணைப்பிரிவு தீர்மானித்துள்ளது.

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இந்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

2019 ஆம் ஆண்டு 24 இலக்க விளையாட்டு தொடர்பான குற்றச் செயற்பாடுகளை தடுக்கும் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள விசேட விசாரணை பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த மாதம் 24 ஆம் திகதி முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், சர்சைக்குறிய இறுதி கிரிக்கட் போட்டி இடம்பெற்ற காலக்கட்டத்தில் இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவுக் குழுவின் தலைவராக செயற்பட்ட அறவிந்த டீ சில்வா விடமும் வாக்கு மூலம் பெற்றப்பட்டது.

பின்னர் அந்த விசேட விசாரணை பிரிவினர் குறித்த போட்டியில் கலந்துக் கொண்ட குசல் மெண்டிஸ்க்கும் அழைப்பு விடுத்திருந்ததுடன் , அவரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொண்டிருந்தனர். 

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை அணித்தலைவர் குமார சங்ககாரவிடம் வாக்குமூலம் வழங்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன் , அவரும் விசேட விசாரணை பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் இது வரையில் கிடைக்கப் பெற்ற விசாரணைகளுக்கமைய ஆட்ட நிர்ணயம் இடம் பெற்றமை தொடர்பில் போதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப் பெறாமையினால், இந்த விசாரணைகளை நிறுத்தி வைப்பதற்கு விசேட பொலிஸ் விசாரணை பிரிவு தீர்மானித்துள்ளதுடன், இது தொடர்பான அறிக்கையை பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்தினவுக்கும் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10
news-image

நியூட்டனின் சகலதுறை ஆட்டத்தால் 2ஆம் அடுக்கு...

2025-03-14 14:08:12
news-image

அவிஷ்க, கவின், அசலன்க ஆகியோரின் அபார...

2025-03-13 19:45:02
news-image

கண்டி அணிக்கு எதிரான போட்டியில் பலமான...

2025-03-13 19:00:12
news-image

மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை ஐசிசி...

2025-03-13 16:16:47