மக்களின் ஆணை கிடைத்தவுடன்  கிளிநொச்சி மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தாம் நடவடிககை எடுப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

No description available.

வடக்கிற்கு விஜயம் மேற்க்கொண்டு நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

No description available.

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் மீன்பிடித்துறை உள்ளிட்டவை  மிக முக்கயிமானதாக காணப்படுகின்றது அவற்றின் நிறைய நிலை கீழ் மட்டத்தில் காணப்படுகின்றது. அதனை உயர்த்த வேண்டும். அதற்கு அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்பட வேண்டும் அதனை உரிய நடவடிக்கைகள் மேற்க்கொண்டு தீரத்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்.

No description available.

இங்கு பிரதான பிரச்சினையாக காணப்படுவது காணி மற்றும் வீட்டுப்பிரச்சனை எமது வேட்பாளர்களுடன் இணைந்து எமது வெற்றியுடன் மேற்படி பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படும் இங்கு பல மாதிரி கிராமங்களை நான் அமைச்சராக இருந்த காலத்தில் நிறுவியுள்ளேன்.

எதிர்வரும் 5 ஆம் திகதி வெற்றிக்கு பின்னர் மேலும் பல மாதிரி கிராமங்களை இங்கு நான் நிறுவுவேன் எனத் தெரிவித்துள்ளார்.