பாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த

Published By: J.G.Stephan

03 Jul, 2020 | 04:57 PM
image

பாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்டத்தில் வாழும் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்  என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தலைமை வேட்பாளர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தமது அரசியல் வாழ்வில் 30 வருடத்தை பூர்த்தி செய்துள்ளமையை முன்னிட்டு அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நாவலப்பிட்டி வாழ் தமிழ் மக்களின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட தமிழ் வேட்பாளர் பாரத் அருள்சாமியும் கலந்து கொண்டார். இதன்போது மஹிந்தானந்த அளுத்கமகே மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 

" கண்டி மாவட்டத்தில் எனக்கு வாக்களிக்கும், வாக்காளர்கள் இரண்டாவது விருப்பு வாக்கை பாரத் அருள்சாமிக்கு வழங்கி அவரை பாராளுமன்றம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நான் சரியில்லையென உங்களுக்கு தோன்றினால் பாரத்துக்கு மட்டுமாவது வாக்களியுங்கள்.

கண்டி மாவட்டத்திலிருந்து தமிழ் உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றம் செல்லவேண்டும். பாரத்தின் தந்தையான அமரர் அருள்சாமி கண்டி மாவட்டத்துக்கு பல சேவைகளை செய்துள்ளார். இதன் காரணமாகவே அவரின் மகனை கொண்டுவந்துள்ளோம். அவரை  நிச்சயம்  வெற்றி பெறவைக்க வேண்டும். நாவலப்பிட்டிய தொகுதியில் அவருக்கு அதிக வாக்குகள் அளிக்கப்படவேண்டும்."  என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44