ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகிவரும் "கோப்ரா "என்ற படத்தில் இடம்பெற்ற "தும்பி துள்ளல் "என்ற சிங்கிள் டிராக் வெளியானது இந்தப் பாடலை பார்வைத்திறன் சவாலுள்ள சிறுமி சஹானா கீபோர்டில் வாசித்து இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு ஏராளமான பாராட்டுகள் குவிகிறது.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'கோப்ரா'. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'தும்பி துள்ளல்.

' என்ற முதல் சிங்கிள் டிராக் பாடல் இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது. வெளியானதிலிருந்து இந்தப் பாடல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. ஏ.ஆர்.ரகுமானின் அற்புத இசையில் உருவான பாடல் எல்லோராலும் பாராட்டப்பட்டு, தற்போது வரை 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றிகரமாக இணையத்தில் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தப் பாடலை நேற்று பார்வைத்திறன் சவாலுள்ள சிறுமி சஹானா கீ போர்டில் மிக அழகாக வாசித்து டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். சஹானா பிறவியிலேயே பார்வைத்திறன் சவால் உள்ள இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சியில் இரண்டாவது பரிசை பெற்றவர். அவர் கீபோர்டில் வாசித்து டுவிட்டரில் வெளியான சிறிது நேரத்திலேயே எல்லோராலும் பாராட்டப்பட்டது. இந்த பாடலும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

நேற்றிரவு சஹானாவின் வீடியோவை கவனித்த ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய டுவிட்டரில் "ஸ்வீட் 'என ரீட்வீட் செய்து பாராட்டியிருந்தார்.

உடனே படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தன் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாகவும் ,இசை அமைப்பாளர்  ஏ.ஆர்.ரகுமானின் சார்பாகவும் சஹானாவிற்கு விலை உயர்ந்த பரிசு ஒன்றை  கொடுத்து மகிழ்ந்துள்ளார்.