மட்டக்களப்பு உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளிடமிருந்து  வேளாணன்மையை பாதுக்க அமைக்கப்பட்ட  மின்சார வேலியின் மின்சாரம் தாக்கியதில் காவலில் இருந்த இரு விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

உன்னிச்சை கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான  5 பிள்ளைகளின் தந்தை முனிச்சாமி தங்கையா, 7 பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் 

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள குறித்த வயல் பிரதேசத்தில் வழமைபோல வேளாண்மை காவலுக்கு சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை இரவு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வயல் பகுதியில் யானைக்காக சட்டவிரோதமாக மின்சார வேலியை வோளாண்மை உரிமையாளர்கள் அமைத்துள்ளனர் .

இந்த மின்சார வேலியின் மின்சாரத்தில் சிக்குண்டு இரு விவசாயிகளும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து குறித்த இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.