சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய்தான் கொரோனா வைரஸ் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

''கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய். கொரோனா வைரஸ் பரவாமல் சீனா தடுத்திருக்கலாம்.  ஆனால், சீனா பரவ அனுமதித்து விட்டது. 

சீனாவுடன் அந்த நேரத்தில் தான் நாங்கள் புதிதாக வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தோம். கையெழுத்தான மையின் ஈரம் காய்வதற்கு முன் அது பரவிவிட்டது” என்றார்.

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் மட்டும் 52,291 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 இலட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.