கவர்ச்சி நடிகை ஷகிலாவின் சுயசரிதை குறும்படமாக தயாராகியிருக்கிறது.

கவர்ச்சி நடிகை ஷகிலா மலையாள திரைப்படங்களில் ஆபாசமாக நடித்து இந்தியாவில் புகழ்பெற்றார். 

அவரின் சுயசரிதையை மலையாள இயக்குனர் சுஜீஷ் என்பவர் குறும்படமாக உருவாக்கியிருக்கிறார்.

இதற்கு 'ஷகிலா' என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

ஷகிலா நடித்த 'டிரைவிங் ஸ்கூல்' என்ற திரைப்படம் ஒரு திரையரங்கில் வெளியாகிறது. முதல்நாள், முதல் காட்சியில் ரசிகர்களின் முன்பு நடிகை ஷகிலா வருகிறார். 

இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த குறும்படம் தயாராகி இருக்கிறது.

இதில் ஷகிலாவாக மலையாள நடிகை சரயூ மோகன் நடித்திருக்கிறார். இவருடைய தமிழில் வெளியான காதலுக்கு மரணமில்லை, சகுந்தலாவின் கணவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் அண்மையில் வெளியான சேரன் நடித்த 'ராஜாவுக்கு செக்' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்த குறும்படம் வரும் ஞாயிறன்று மாலை 6 மணிக்கு யூட்யூப் தளத்தில் வெளியாகிறது.

இதனிடையே, நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு முழுநீள திரைப்படமாக தமிழ், கன்னடம் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராகி கொண்டிருக்கிறது என்பதும், அதில் பொலிவவூட் நடிகை ரிச்சா சத்தா, ஷகிலாவாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.