இத்தாலி துறைமுகத்தில் சுமார் 1.1 பில்லியன் டொலர் மதிப்புள்ள போதை மாத்திரைகள் சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Italian police seize 14 tonnes of amphetamines allegedly produced ...

இத்தாலி நாட்டில் உள்ள சலேர்னோ துறைமுகத்தில் கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 தொன் ஆம்படமைன் போதை மாத்திரைகளை இத்தாலிய பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த போதை மாத்திரைகள் அனைத்தும் பெரிய பரல்களில் காகிதத்திலும், கியர் சக்கரங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 

இந்த போதை மாத்திரைகள் விவகாரத்தில் உள்ளூர் குற்ற குழுக்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Captagon: Italy seizes €1bn of amphetamines 'made to fund IS ...

இந்த போதை மாத்திரைகளின் மதிப்பு சுமார் 1.1 பில்லியன் டொலர் என கூறப்படுகிறது.

இவ்வாறு பாரிய தொகை போதை மாத்திரைகள் இத்தாலியில் ஒரே சோதனையில் சிக்கி இருப்பது இத்தாலிய வரலாற்றில் முதற்தடவையாக பார்க்கப்படுகிறது. 

இந்த போதை மாத்திரைகள், ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையையும் திருப்திப்படுத்த போதுமானவை என தெரிய வந்துள்ளது.

Italian police seize over $1 billion of 'ISIS-made' 'Captagon ...

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதை மாத்திரைகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதற்காக சிரியா நாட்டில் தயாரிக்கப்பட்டவை என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.