தபால் ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தினார் பிரதமர் மஹிந்த!

03 Jul, 2020 | 07:27 AM
image

அரச நிர்வாக இல 6/2006 சுற்றறிக்கை செயற்படுத்தப்பட்டதன் பின்னர் அந்த சுற்றறிக்கைக்கமையவும், அதற்கு வெளியேயும் தபால் திணைக்களத்தினுள் மேற்கொள்ளப்படும் முறையற்ற தீர்மானங்கள் காரணமாக முழுமையான தபால் ஊழியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக இலங்கை தபால் தொழிற் சங்கங்களின் முன்னணி தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று (2020.07.02) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்னணி இதனை தெரிவித்துள்ளது.

அந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குவதற்காக புதிய சேவை அரசியலமைப்பு ஒன்று தயாரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 

இருந்த போதிலும் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததனை தொடர்ந்து அதனை செயற்படுத்தவில்லை என இலங்கை தபால் தொழிற்சங்கங்களின் முன்னணி, பிரதமருக்கு சுட்டிக்காட்டியது.

தபால் ஊழியர்களின் சிக்கல் 04 பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி காலப்பகுதியில் இந்த சிக்கல்களுக்கு அணுக ஆணைக்குழு அறிக்கை ஊடாக சமர்பிக்கப்பட்ட யோசனையின் மூலம் தொடர்ந்து தபால் ஊழியர்களில் பெரும்பான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முன்னணியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தபால் தொழிற்சங்கங்களின் முன்னணி சுட்டிக்காட்டிய சிக்கல்கள் தொடர்பில் அமைச்சரவையுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் செயலாளர் காமினி செனரத் மற்றும் இலங்கை தபால் தொழிற்சங்கங்களின் முன்னணியின் பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20
news-image

சபாநாயகர், பிரதி சபாநாயகரைச் சந்தித்தார் துருக்கித்...

2025-02-06 18:19:22
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகளின்...

2025-02-06 17:23:17