மியன்மார் நாட்டில் வடக்கு பகுதியில் பச்சை மரகத கல் அகழ்வு இடம்பெறும் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 162 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Landslide in Myanmar mine kills at least 162 people - MarketWatch

அந்நாட்டு நேரப்படி இன்று காலை 6:30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 200 சுரங்க தொழிலாளர்கள் வரை மண்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்  தற்போது வரை 162 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 54 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இருள் சூழ்ந்துள்ளதால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Landslide at Myanmar jade mine kills at least 123 - The Globe and Mail

இதேவேளை, கச்சின் மாநிலத்தின் ஜேட் சுரங்கங்களில் இடம்பெற்றுள்ள இவ் விபத்து பொறுப்பற்ற சுரங்க நடைமுறைகளைத் தடுக்க அரசாங்கம் தவறியதால் நிகழ்ந்துள்ளதாகவும்  இந்த விபத்து "ஒரு மோசமான சம்பவம்" என்றும் லண்டனை தளமாகக் கொண்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையமான குளோபல் விட்னஸ் தெரிவித்துள்ளது.

Landslide at Myanmar jade mine kills at least 123 people ...

சுரங்கத்தில் மண்சரிவு ; 100 க்கு மேற்பட்டோர் பலி - மியான்மாரில் சோகம்