(எம்.ஆர்.எம்.வஸீம்)

தந்தையின் வழியில் செல்வதாக பிரசாரம் செய்யும் சஜித் பிரேமதாச அதிகாரத்துக்கு வந்த பின்னர் புலிகளை மீண்டும் தலைதூக்க வைக்கவே முயற்சிக்கின்றார். அதனை யாரும் அனுமதிக்கமாட்டார்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு மாவட்ட வேட்பாளர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

வடகொழும்பில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக கருதப்படும் மத்திய கொழும்பு இம்முறை தேர்தலில் அதன் வரலாறு மாறப்போவது நிச்சயமாகி இருக்கின்றது. 

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து செயற்படும் சஜித் அணி ஆட்சியை கைப்பற்றுவதற்கு முயற்சிப்பதைவிட கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் அதிகாரத்தை பைற்றவே முயற்சிக்கின்றது. 

ரணசிங்க பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும்போது விடுதலைப்புகளுக்கு ஆயுதம் வழங்கியதை ஐக்கிய தேசிய கட்சியினரே தெரிவிக்கின்றனர்.

அப்படியானால் சஜித் பிரேமதாச அதிகாரத்துக்கு வந்தால்  விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்க இடமிருக்கின்றது. அதற்கு நாங்கள் இடமளிக்கமுடியாது.

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வை மேலும் சக்திபெறச்செய்ய சிறிலங்கா சுதந்திர கட்சியாகிய நாங்கள் அனைவரும் நடவடிக்கை எடுப்போதும். 

அத்துடன், நாங்கள் வெற்றிபெற்று ஆட்சியமைத்ததும் கடந்த காலங்களில் கொழும்பு நகரில் எங்களால் விடுபட்ட குடிசை வீடுகளை அகற்றிவிட்டு, மக்கள் நிம்மதியாக வாழக்கூடி வீட்டுத்திட்டங்களை ஏற்படுத்துவோம். அதன் மூலம் கொழும்பில் குடிசை வீடு என்ற நாமத்தையே இல்லாமலாக்குவோம் என்றார்.