கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு ; பிரதமரை சந்திக்க தீர்மானம்

Published By: Digital Desk 3

02 Jul, 2020 | 09:36 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை முதல் இவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இவ்விடயம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று வியாழக்கிழமை கூடி எடுத்த தீர்மானங்களுக்கு அமைய பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது.

3 பளுதூக்கிகளையும் கிழக்கு முனையத்தில் பொருத்தி, பணிகளை ஆரம்பிக்குமாறு ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. எனினும் அதற்கு தீர்வேதும் வழங்காதமையாலேயே புதன்கிழமை 3 ஊழியர்கள் பளுதூக்கியின் மீதேறி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த விடயம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 பளுதூக்கிகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இந்த பளுதூக்கிகளை கிழக்கு முனையத்தில் பொருத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30
news-image

குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள்...

2024-10-05 17:29:49
news-image

சிறையிலுள்ள கணவனுக்கு தேங்காய் சம்பலில் போதைப்பொருளை...

2024-10-05 16:00:33
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக கேஸ்...

2024-10-05 15:37:37
news-image

பியூமி ஹன்சமாலியின் சொகுசு வாகனம் தொடர்பில்...

2024-10-05 16:24:12
news-image

தம்புள்ளையில் அனுமதிப்பத்திரமின்றி இறைச்சி விற்பனை செய்தவர்...

2024-10-05 15:46:39
news-image

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர்...

2024-10-05 15:18:19