உலகநாடுகளில் கொரோனா தொற்று காரணமாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  அத்துடன் ஆசியாவில் கொரோனா தாக்கம் அதிகம் பதிவாகிய நாடாக இந்தியா உள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர் மற்றும் இந்தியாவின் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து  கொரோனாவுக்கு COVAXIN என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. 

COVID-19 Update: Bharat Biotech Develops India's First Coronavirus ...

இத் தடுப்பு மருந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள குறித்த நிறுவனம், இந்த சோதனை வெற்றியடைந்ததையடுத்து  அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு COVAXIN தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய ஐ.சி.எம்.ஆர் இடம் ஒப்புதல் பெற்றுள்ளது. 

இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது.

குறித்த நிறுவனம் இந்த மாதம்முதல் இந்தியாவின்,  நாடு முழுவதும் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் COVAXIN தடுப்பூசிக்கான பரிசோதனை தொடங்க உள்ளது.

கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பரிசோதனையில் உலகநாடுகள் ஈடுபட்டு வருகின்றன. பல நிறுவனங்கள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள போதும் இதுவரை எதுவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.