(செ.தேன்மொழி)

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் 12 பேரையும் எதிர்வரும் புதன்கிழமை வரை தடுப்புகாவலில் வைத்து விசாரிப்பதற்காக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 12 உத்தியோகஸ்தர்களும்,கடத்தல் காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை அவர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வு பிரிவினரால்  இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 16 உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விசாரணைகளின் போது ஏற்கனவே 4 அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களுள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் , இரு சார்ஜன்களும் , ஒரு கான்ஸ்டபிளும் உள்ளடங்குவதாகவும், போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பணிப்பாளரினால் இந்த அவர்களின் பணி இடைநிறுத்த பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.