சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு டயாலிசிஸ் செய்து கொள்வது வழக்கம். இந்த டயாலிசிஸ் சிகிச்சை முறையில் தற்போது பெரிடோனியல் டயாலிசிஸ் என்ற புதிய சிகிச்சை முறை அறிமுகமாகியிருக்கிறது.

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரம் இருமுறை அல்லது மூன்று முறை மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்து கொள்வார்கள்.  இந்த முறையில் ரத்த சுத்திகரிப்பு செய்வது கால விரயத்துடன் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. இதற்கு இதுவரை மாற்று சிகிச்சை என்பது இல்லாதிருந்தது. தற்போது பெரிடோனியல் டயாலிசிஸ் என்ற சிகிச்சை முறை அறிமுகமாகியிருக்கிறது.

Initiating Peritoneal Dialysis After Catheter Insertion

இந்த சிகிச்சை முறையின் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வது தவிர்க்கப்படுகிறது. இந்த சிகிச்சையை வீட்டிலிருந்தே மேற்கொள்ளலாம். ஹீமோ டயாலிசிஸ் செய்து கொள்வதினால் நோய் தொற்று ஏற்படுவதிலிருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். இத்தகைய சிகிச்சையின்போது ஒரு லீற்றர் முதல் மூன்று லீற்றர் வரை டயாலிசிஸ் திரவம் தேவைப்படலாம் இதற்காக நாளொன்றுக்கு இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சிறுநீரக கோளாறுகளுக்காக அறிமுகமாகியிருக்கும் இந்தபெரிடோனியல் டயாலிசிஸ் சிகிச்சை முறைக்கு வரவேற்புஅதிகரித்து வருகிறது.

டொக்டர் மீனாட்சி சுந்தரம்