கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று நாடுகள் சிக்கித் தவித்த 91  இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பினர். 

கட்டார் தலைநகர் டோகாவிலிருந்து 21 இலங்கையர்கள் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அதிகாலை 1.45 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர்.

ஒருவர்  அபுதாபியில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நாட்டை வந்தடைந்தார்.

61 இலங்கையர்கள் மாலைத்தீவிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.102 என்ற விசேட விமானம் மூலம் இன்று காலை 9.45 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர்.

அத்துடன் 8 இலங்கையர்கள் மாலைத்தீவிலிருந்து நான்காவது விமானத்தில்  10.45 மணியளவில்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.