திருகோணமலை மாவட்டத்தில் சிறிய வெட்டுக்கிளி வகையைச் சேர்ந்த தும்பி இனங்கள் படையெடுத்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

திருகோணமலை கரையோரப் பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் இத்தும்பி இனங்கள் பறந்து திரிவதாக தெரியவந்துள்ளது. 

திருகோணமலை கடற்கரை பகுதியிலிருந்து புல்மோட்டை வரையான கடற் கரையோரங்களில் இத்தும்பி இனங்கள் பறந்து திரிகின்றன. மேலும், இலட்சக் கணக்கான தும்பி இனங்கள் இறைச்சலுடன் உயரத்தில் பறந்து திரிவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

நேற்று(01.07.2020) மாலையிலிருந்து இன்று(02.07.2020) வரை இத்தும்பி இனங்கள் கடற் கரையோரப் பகுதிகளில் பறக்கின்றமை குறிப்பிடதக்கது.