கலைஞர்களை பாதுகாக்க உதவுவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு

02 Jul, 2020 | 02:44 PM
image

கொவிட் நோய்த்தொற்றை ஒழித்து உலக நிலைமைகள் சீராகும் வரை பார்த்திராது கலைஞர்களை தேசிய பொருளாதாரத்துடன் இணைத்து  பாதுகாப்பதற்கு உதவுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பல சந்தர்ப்பங்களில் கலைஞர்கள் அவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். அதன் மூலம் அனைத்து மட்டங்களிலும் கலைஞர்களுக்கு தமது படைப்பு ரீதியான பங்களிப்பை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

கடந்த காலத்திலும் கொவிட் நோய்த்தொற்றின் காரணமாகவும் இழந்த சந்தர்ப்பங்களை மீண்டும் உருவாக்குவதற்கான பின்புலத்தை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கலைஞர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் பற்றி நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.

9ஆம் வகுப்பில் நிறுத்தப்படும் அழகியல் பாடத்தை க.பொ.த சாதாரண தரம் வரை பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க சுட்டிக்காட்டினார். இந்த முன்மொழிவை தேசிய கல்விக்கொள்கைக்கான செயலணிக்கு சமர்ப்பிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைத் தொகை

கிடைக்கப்பெறாமைக்கான காரணங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சர்வதேச ரீதியாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை இதன் காரணமாக நாடு இழந்துள்ளது. 

இலத்திரனியல் ஊடகங்களினூடாக ஒளிபரப்பப்படும் பாடல்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாமை குறித்து கலைஞர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டனர். இதுபற்றி அரச மட்டத்தில் நடவடிக்கை எடுத்த தயாரிப்பாளர்களின் உரிமையை பாதுகாப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்தனர்.

கலைஞர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், அரச வங்கிகளின் ஊடாக அது உரிய முறையில் இடம்பெறாமை கவலைக்குரியதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்களுக்கு வரித் தொகையை அறவிட்டு அதனை கலைஞர்களின் நன்மைக்கு பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கலைஞர்கள் சுட்டிக்காட்டினர். வெளிநாட்டு திரைபடங்களை நாட்டில் படமாக்குவதற்கு சந்தர்ப்பங்களை வழங்கி அந்நியச் செலாவணியை சம்பாதிப்பதற்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

கிராமிய கலைஞர்கள் மாகாண மற்றும் பிரதேச மட்டத்தில் ஒழுங்குபடுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் திரைப்பட இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட கலைத்துறையின் பல்வேறு தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலைஞர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...

2025-11-08 12:45:56
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோவின் பிணை மனு...

2025-11-08 10:49:17
news-image

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

2025-11-08 10:33:10
news-image

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில்...

2025-11-08 10:22:56
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45