மியன்மார் நாட்டில் வடக்கு பகுதியில் பச்சை மரகத கல் அகழ்வு இடம்பெறும் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மேலும் 200 பேர் மண் சரிவில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன் இதுவரை 113 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் அந்நாட்டு நேரப்படி காலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கச்சின் மாநிலத்தில் உள்ள ஹபகாந்த் டவுன்ஷிப் பகுதியில் சுரங்கத் தொழிலாளர்கள் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது பெய்த கனமழையால் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது.

அங்கு சுரங்கத் தொழிலாளர்கள் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள பச்சை மரகத கற்களை தயாரிக்க அபாயகரமான சூழ்நிலையில் வேலையில் ஈடுபடுகின்றனர்.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உலகின் மிகப்பெரிய பச்சை மரகத கற்களைக் கொண்ட நாடா மியன்மார் விளங்குகின்றது. ஆனால் அதன் சுரங்கங்களில் ஏராளமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.