மத்திய மெக்சிக்கோவில்  இராபுவாடோ நகரத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதோடு ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த ஏழு பேரில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை குறித்து விசாரிக்க ஒரு சிறப்புக் குழுவை நியமித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தை  அந்நாட்டு சட்டமா அதிபர்  "கோழைத்தனமான குற்றச் செயல்" என்று கூறியுள்ளார். 

ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் பதவியுற்று 19 மாதங்களில் இந்த தாக்குதல் மிக மோசமான வெகுஜன படுகொலைகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, ஜூன் மாதம் 6 ஆம் திகதி இராபுவாடோவில் உள்ள போதைப்பொருள்கு அடிமையானோரின் புனர்வாழ்வு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதில் 10 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.