மிலேனியம் சலன்ஞ் கோப்ரேசன் எனப்படும் எம்.சி.சி. ஒப்பந்த விவகாரத்தை இராஜதந்திர ரீதியாக கையாள்கிறோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கதகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 

அங்கு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன் மேலும் கூறுகையில்,

கடந்த அரசாங்கத்தினால் இரு சந்தர்ப்பங்களில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை திடீரென விலக்கிக்கொள்ள முடியாது.  ஆனால் நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஜனாதிபதி கைச்சாத்திட மாட்டார்.

எனவே எம்.சி.சி. ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் கையாள்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.